இந்திய டெஸ்ட் தொடர் - ரோஹித் சர்மா விலகல்? - அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் தொடரில் அடுத்த கேப்டன் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார்?
சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி தோல்வியை குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியே பரவாயில்லை போல, ஆனால் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சொதப்பி வருகிறது என்று ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தற்போது ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு யார் கேப்டனாகப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேப்டன் பட்டியலில் முதலிடத்தில் ரிஷப் பந்த்தும். 2வது இடத்தில் கே எல் ராகுல். 3வது இடத்தில் ரகானே. 4வது இடத்தில் அஸ்வின் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். ஆனால், யார் கேப்டன் என்பதை பிசிசிஐ முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |