நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ரோஹித் ஏமாற்றிவிட்டார் : சுனில் கவாஸ்கர்!
நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா என்னை ஏமாற்றிவிட்டார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியை டி20 உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்குகூட நுழையமுடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும், மீண்டும் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கு அவர் தலைமையில் இந்திய அணி வேண்டாம் என்று நெட்டிசன்க சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரோஹித் ஏமாற்றிவிட்டார் : சுனில் கவாஸ்கர்
இந்நிலையில், இது குறித்து முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
நான் ரோஹித் சர்மா மேல் ரொம்ப நம்பிக்கை வைத்தேன். அதிகமாக எதிர்பார்ப்பு வைத்தேன். ஆனால், ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் என்னை ஏமாற்றி விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும், டி20 கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவின் செயல்பாடு எதுவும் கிடையாது.
அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் செய்யவில்லை. ஐபிஎல் போட்டிகளில் 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட நுழையாமல் போனது.
ஒவ்வொரு தொடருக்கும் 15 நாட்களுக்கு முன்பே விரர்கள் பயிற்சி போட்டிகளில் கறமிறங்க வேண்டும். அப்போதுதான், திறமை வெளிப்படும். சீனியர் வீரர்களுக்கும் பொறுப்பு கூடும். சினீயர் வீரர்களுக்கு வெளிநாட்டிற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள விரும்புவது கிடையாது. அது ஏன் தெரியுமா? அவர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லையென்றால் கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |