கேட்சை கோட்டை விட்ட புவனேஷ்வர் குமார் - கடுப்பில் ரோகித் சர்மா செய்த செயல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நிலையில் களத்தில் ரோகித் சர்மா கோவப்பட்டது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் தலா 52 , வெங்கடேஷ் ஐயர் 33 ரன்கள் விளாசினர். பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனிடையே இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்த போது மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் – பவல் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியதால் அந்த அணி வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்தது.
அப்போது 16 ஓவரை வீசிய புவனேஷ்குமார் பந்தை பவல் வேகமாக அடிக்க அது பேட்டில் பட்டு கிரீசுக்குள் மேல் நோக்கி சென்றது. பந்தை பிடிக்க சென்ற புவனேஷ்குமார் அதனை கேட்ச் பிடிக்காமல் விட்டு விட அவ்வளவு கடுப்பான ரோகித் பந்தை எட்டி உதைத்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
— Addicric (@addicric) February 18, 2022