'ரோகித் சர்மா பற்றி ஒரு வார்த்தை'... - பட்டென பதில் சொன்ன மார்னஸ் லபுஸ்சாக்னே ...!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் 'ரோகித் சர்மா பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சாக்னே பதிலளித்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அசத்தல்
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.
ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்ன மார்னஸ்
இந்நிலையில், ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சாக்னே நேற்று டுவிட்டரில் அரை மணி நேரம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். அப்போது, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அவர் பதிலளித்து வந்தார்.
அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி பற்றிய கேள்விகளிக்கு அவர் பதிலளித்தது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கேள்வியில், ரசிகர் ஒருவர் 'ரோஹித் சர்மா பற்றி ஒரு வார்த்தை?' என்று கேட்டார். அதற்கு லபுஸ்சாக்னே, 1 வார்த்தைக்கு மேல், ஆனால் அவர் பேட் செய்வதைப் பார்ப்பது கண்ணுக்கு எளிதானது - மென்மையான பேட் ஸ்விங் என்று பதிலளித்தார்.
மற்றொரு ரசிகர் ஒருவர், பேபுலஸ் 4-ல் (விராட், ரூட், வில்லியம்சன், ஸ்மித்) ஒருவருடன் சேர்ந்து உங்களுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு லபுஸ்சாக்னே, விராட் கோலி என்று பதிலளித்தார்.
தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Doing Q&A for the next 30 mins - ask away!
— Marnus Labuschagne (@marnus3cricket) March 27, 2023
Doing Q&A for the next 30 mins - ask away!
— Marnus Labuschagne (@marnus3cricket) March 27, 2023
Doing Q&A for the next 30 mins - ask away!
— Marnus Labuschagne (@marnus3cricket) March 27, 2023