39 வயதில் பறந்து ரன்அவுட் செய்த ரோஹித்: 185 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து (வீடியோ)
New zealand 185 runs allout vs india: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆக்லாந்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சில் நியூசிலாந்து 185 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
விக்கெட்டுகள் சரிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஈடன் பார்க்கில் நடந்து வருகிறது.
FLYING RUNOUT BY ROHIT SHARMA🥵😯😯 Fitnesss Level of 39 yrs old Veteran 💪 #NZvsIND #ODI #RohitSharma https://t.co/OwsqqATXXG
— 𝙉𝙖𝙥𝙤𝙡𝙚𝙤𝙣 🇮🇳 (@goatnapoleon) November 4, 2026
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியில் வில் யங் (9), ஹென்றி நிக்கோல்ஸ் (9) ஆகியோர் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
டிம் செய்பெர்ட் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரார் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் டாம் லாதம் 3 ஓட்டங்களில் அவுட் ஆக, டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) நிதானமாக ஆடினார்.
அதிர வைத்த ரோஹித் ஷர்மா
ஆனால், அவர் 28 ஓட்டங்களில் இருந்தபோது ரோஹித் ஷர்மா (Rohit Sharma) பாய்ந்து சென்று ரன்அவுட் செய்து அதிர வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.
க்ளென் பிலிப்ஸ் 30 ஓட்டங்களும், பிளேர் திக்னர் 34 ஓட்டங்களும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்நூர் பிரார் 3 விக்கெட்டுகளும், அன்சுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
