பிசினஸில் கலக்கும் ரோஹித் சர்மா.., அவர் சேர்த்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது உத்திகள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
2021 -ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக Rohit Sharma நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு பல ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாடி வெற்றிகளை குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வந்த எதிர்ப்பு யாராலும் மறக்க முடியாது.
சொத்து மதிப்பு
Rohit Sharma தனது பிசினஸ் உத்திகள் மூலம் ரூ.214 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளார். இவர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏ பிளஸ் கான்ட்ராக்ட்டின் மூலமாக ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பாதிக்கிறார்.
மேலும், BCCI Contract தவிர இந்தியாவுக்கு விளையாடும் Test match -க்காக தலா ரூ.15 லட்சம், One Day Match -க்காக ரூ.6 லட்சம், டி20 போட்டிக்காக ரூ.3 லட்சம் வாங்குகிறார்.
Mumbai Indians
2011 -ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு பல ஐபிஎல் வெற்றிக்கு வழிவகுத்தது. 2023 ம் ஆண்டு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸால் ரோஹித் ரூ.16 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார். இவர், 16 சீசன்களில் இருந்து மொத்தம் ரூ.178 கோடி சம்பாதித்துள்ளார்.
பிராண்ட் ஒப்புதல்கள்
Adidas, Hublot, Oakley, Ceat, Nissan, Oppo, La Liga மற்றும் Dream11 போன்ற பிராண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை ரோஹித் சர்மா வசூலிக்கிறார். அவர் ஒரு ஒப்புதலுக்கு ரூ.5 கோடி வசூலிக்கிறார்.
முதலீடுகள்
2015 -ம் ஆண்டு ரோபோடிக் ஆட்டோமேஷன் தீர்வுகள் என்ற நிறுவனத்தில் ரோஹித் சர்மா முதலீடு செய்துள்ளார்.
அதே போல 2021 -ம் ஆண்டில் Veiroots Wellness Solutions என்ற ஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.89 கோடி முதலீடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |