என்னுடைய முதல் பணி இதுதான்! இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா சபதம்
இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் ரோகித் சர்மா முதலாவதாக தான் செய்யப்போகும் பணி குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி தூக்கப்பட்டார்.
இதையடுத்து ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கேப்டனாக செய்யப்போகும் முதல் பணி குறித்து தற்போது ரோகித் சர்மா தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், முக்கிய போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நாங்கள் தோல்வியை சந்தித்து வருகிறோம்.
எனவே இனிவரும் காலத்தில் இந்திய அணி துவக்கத்தில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்தால் கூட பின்னர் வரும் 3, 4, 5, 6 ஆகிய வீரர்கள் பேட்டிங் செய்து அணியை நல்ல ரன் குவிப்பிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு அணியை தயார் செய்யப் போகிறேன். இதுவே என் முதல் பணி.
மேலும் 10 ரன்னுக்கு 2 அல்லது 3 விக்கெட்டுகள் விழுந்தால் 180, 190 ரன்களை கூட அடிக்க முடியாமல் போகிறது. ஆனால் இந்த நிலைமையை மாற்றி மிடில் ஆர்டரிலும் இந்திய அணியை சிறப்பான அணியாக மாற்றி வீரர்களை அதற்கேற்றார் போல தயார் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.