நான் சரியான கேப்டன் இல்லை..! கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா
என்னை சரியான கேப்டன் இல்லை என்று கூறுவார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து மனம் திறந்துள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்
13வது உலக கோப்பை தொடர் இந்தியாவில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் கிரிக்கெட் நிபுணர்கள் இந்த உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கணித்து வருகின்றனர்.
இதற்கிடையில் உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் அடுத்த புதிய கேப்டனுக்கான இடத்தில் கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனம் திறந்த ரோகித் சர்மா
இந்நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்து ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார், அதில் சில நேரங்களில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும், சில சமயங்களில் அவை நடக்காமலும் போகும், எனவே எல்லாவற்றிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
AFP
ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலே எல்லோரும் என்னை நல்ல கேப்டன் இல்லை என கூறுவார்கள். ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதை தான் நான் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |