அஸ்வினை டி20 உலகக்கோப்பைக்கு எடுக்க ஆதரவு கொடுத்த வீரர் இவர் தான்! சம்மதம் தெரிவித்த கோலி: வெளி வரும் தகவல்
உலகக்கோப்பை தொடரில் அஸ்வினை இந்திய அணியில் எடுக்க சொன்னதே ரோகித் சர்மா தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில், நான்கு ஆண்டுகள் சர்வதேச டி20 போட்டிகள் விளையாடாத அஸ்வின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதற்கு முக்கிய காரணம், அவருடைய அனுபவம் தான் எனவும், வாஷிங்டன் சுந்தர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவருக்கு பதிலாக அஸ்வினை களமிறக்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலில், அஸ்வினை டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க சொன்னதே ரோகித் சர்மா தானாம், இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்யும்போது கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் துணை கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் அஷ்வினின் பந்துவீச்சை அடித்து விளையாடுவது கடினமாக இருந்தது, அவர் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். எனவே உலக கோப்பை தொடரில் அவர் ஆட வேண்டும் என்று ரோஹித் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
கோலியும் அதை ஏற்றுக் கொண்டு தேர்வு குழுவினரிடம் அஸ்வினை சேர்க்கும் படி வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதன் பின்னரே அஸ்வினின் பெயர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.   
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        