யாராவது ஒருவராவது விளையாடி இருந்தால்.. கவலையாக உள்ளது: மனமுடைந்த ரோகித்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான தோல்வி குறித்து ரோகித் சர்மா வேதனையுடன் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்களில் இதயத்தை நொறுக்கியது. இந்த மோசமான தோல்வியினால் ரோகித் சர்மா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் பேசிய ரோகித் சர்மா, கடினமான களத்திலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'இதுபோன்ற இலக்கை துரத்தும் போது பார்ட்னர்ஷிப் அவசியம். ஆனால் மிடில் ஓவர்களில் சிலரின் பொறுப்பே இல்லாத ஷாட்கள், எங்களை தோல்விக்கு கொண்டு சென்றது. அதில் நானும் அடங்குவேன். மிடில் ஆர்டரில் யாரேனும் ஒருவராவது கடைசி வரை ஆட வேண்டும். ஆனால் இங்கு அது நடக்கவே இல்லை. எதிரணிகளில் அது மிகவும் பொறுப்பாக நடக்கிறது. இங்கு நமக்கு நடக்கவில்லை என்பது தான் வலிக்கிறது.
முதலில் நாங்கள் செட்டில் ஆன அணி தானா என்பது சந்தேகமாக உள்ளது. நாட்டிற்காக விளையாடும்போது, வீரர்களின் பணி வேறு. ஆனால் இங்கு அனைவரும் வேறு மாதிரியான ஆட்டத்தை காட்ட வேண்டும். அதுதான் எனக்கு கவலையாக உள்ளது. எனினும் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளை தந்துள்ளேன் என நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.