111 ரன் இங்கு கடினமான இலக்கு தான் - ரோஹித் ஷர்மா
நியூயார்க்கில் ரன் குவிப்பது கடினம் என்று இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
111 ஓட்டங்கள் இலக்கினை எட்ட இந்திய அணி 18.2 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
எளிதானது கிடையாது
ரோஹித் ஷர்மா இந்தப் போட்டி குறித்து கூறுகையில், ''எங்களுக்கு இந்த இலக்கு கடினமாக இருக்கும் என்று தெரியும். நாங்கள் சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்ததற்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இங்கு ரன் குவிப்பது கடினம்.
எனவே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானது கிடையாது. நாங்கள் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் அடிப்படை விடயங்களை கடைசி வரை பின்பற்றினோம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |