இப்படி சிக்ஸ்ர் அடிக்க முடியுமா? தீபக் சஹாரின் அடியைப் பார்த்து சல்யூட் அடித்த ரோகித்: வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் திபக் சஹார் அடித்த சிக்ஸரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சல்யூட் அடித்த ரோகித்சர்மா வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித்சர்மா அரைசதம் அடித்து 56 ஓட்டங்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இஷான் கிஷான்(29), ஸ்ரேயாஸ் அய்யர்(25), வெங்கடேஷ் அய்யர்(20) என அடிக்க, கடைசி கட்டத்தில் வந்த தீபக் சஹார் தன் பங்கிற்கு 8 பந்தில் 21 ஓட்டங்கள் குவித்தார்.
— Simran (@CowCorner9) November 21, 2021
குறிப்பாக அவர் ஆட்டத்தின் கடைசி ஓவரின் ஒரு பந்தில் அற்புதமாக 95 மீற்றருக்கு சிக்ஸர் பறக்கவிட்டார். இதைக் கண்ட ரோகித் சர்மா கைதட்டி பாராட்டியதுடன், அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Rohit reaction to Deepak Chahar’s six ? #indvnz pic.twitter.com/JHurIXkEP8
— Mon (@4sacinom) November 21, 2021