46 ரன்களுக்கு ஆல்அவுட் என்பதை எதிர்பார்க்கவில்லை! மீண்டு வருவோம் - படுதோல்வி குறித்து ரோஹித் ஷர்மா விளக்கம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்தது குறித்து இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணிக்கு பேரிடி
பெங்களூவில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 46 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது.
ரோஹித் ஷர்மா விளக்கம்
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறுகையில், "முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக துடுப்பாட்டம் செய்யவில்லை. நாங்கள் 46 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம், இது ஒரு நல்ல முயற்சி. 350 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும்போது அதிகம் யோசிக்க முடியாது.
ரிஷாப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் துடுப்பாட்டத்தைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. நியூசிலாந்து அணி நன்றாக பந்துவீசியது, அதற்கு நாங்கள் பதிலளிக்க தவறிவிட்டோம். நாங்கள் மீண்டு வருவோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |