இவர் தான் கோலிக்கு பதிலாக இந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவின் கேப்டனாக இருக்க வேண்டும்! பெயரை வெளிப்படுத்திய கவாஸ்கர்
டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா அணியின் கேப்டன் பதவிக்கு கோலிக்கு மாற்றாக தான் விரும்பும் வீரரின் பெயரை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 அணித்தலைவராக இருந்த விராட் கோலி, 2021 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
எனினும், இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக தொடருவேன் என உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், 2022 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 1 வருட இடைவெளியே உள்ள நிலையில், நிலையான கேப்டன்சி இந்தியாவுக்கு உதவும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கும், 2022 டி20 உலகக் கோப்பைக்கும் ரோகித் சர்மாவே இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என கவாஸ்கர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் தகுதியானவர். ரிஷப் பந்த்-ம் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக தகுதியானவராக உள்ளார் என சுனில் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.