மிரட்ட நினைத்த இங்கிலாந்து வீரர்! அசால்ட்டாக சிக்ஸர் பறக்க விட்ட ரோகித்: வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மா, ஆப் திசையில் சிக்ஸர் பறக்க விட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
லீட்ஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்ததால், இந்திய அணி 354 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வருகிறது.
சற்று முன் வரை இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Rohit Sharma upper-cut shot and it goes all the way for six ?#ENGvIND #RohitSharma #IndvsEng #ENGvsINDpic.twitter.com/mZZ6q0lyW8
— ABDULLAH NEAZ (@AbdullahNeaz) August 27, 2021
குறிப்பாக இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ராபின்சன் மற்றும் ஒவர்டன் போன்றோர் பவுன்சர் வீசி மிரட்டி வந்தனர்.
அப்படி ராபின்சன் பவுன்சர் வீசிய பந்தை, ரோகித்சர்மா அப்படியே தெர்ட் மேன் திசையில் அற்புதமாக சிக்ஸர் பறக்கவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.