ஒருத்தன் இருந்தான், அவன் விளையாடினத பார்த்திருக்க மாட்டிங்க! இங்கிலாந்து வீரருக்கு ரோஹித் கொடுத்த பதிலடி வைரல்
ரிஷப் பண்ட்டை குறிப்பிட்டு இங்கிலாந்து வீரருக்கு இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பென் டக்கெட் கருத்து
இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பாஸ்பால் (இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லமின் அணுகுமுறை) தாக்கத்தினால் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை விளையாடத் தொடங்கினார் என, இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் (Ben Duckett) கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), 'எங்கள் அணியில் ரிஷாப் பண்ட் என்று ஒரு பையன் இருந்தான். ஒருவேளை பென் டக்கெட் அவன் விளையாடுவதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை' எனக் கூறி டக்கெட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
ரிஷாப் பண்ட் வைரல்
ரிஷாப் பண்ட் டெஸ்ட் போட்டிகளை டி20 கிரிக்கெட் போல் ஆடக்கூடியவர். குறிப்பாக, 2022யில் ரிஷாப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக 111 பந்துகளில் 4 சிக்ஸர், 19 பவுண்டரிகள் விளாசி 146 ஓட்டங்கள் எடுத்தார்.
தற்போது ரோஹித் சர்மாவின் இந்த கருத்தினைத் தொடர்ந்து ரசிகர்கள் ரிஷாப் பண்ட்டை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |