சதத்தை நோக்கி சென்ற ரோகித்தை போல்டாக்கிய இலங்கை வீரர்! அறிமுக போட்டியிலேயே மிரட்டல் பந்துவீச்சு
கவுகாத்தியில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவை 83 ஓட்டங்களில் மதுஷன்கா வெளியேற்றினார்.
அதிரடி காட்டிய ரோகித்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. அதிரடியாக தனது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தனது 47வது ஒருநாள் அரைசதத்தை கடந்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய சுப்மன் கில்லும் அரைசதம் அடித்தார். இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.
ரோகித் 83
கில் 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா அதிரடியில் மிரட்டினார். அவர் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா அவரை போல்டாக்கினார்.
ரோகித் சர்மா 67 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தற்போது வரை 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், கே.எல்.ராகுல் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.