டி20 உலகக்கோப்பைக்கு பின் எங்கள் பயணம்! நாளை நியூசிலாந்துடனான போட்டி நடைபெறும் நிலையில் புதிய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
விராட் கோலி விளையாடும் போதெல்லாம் பெரிய தாக்கத்தை உண்டு செய்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா, வீரர்கள் தனிப்பட்ட முறையில் அணிக்காக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், தனிமனிதனாக சுதந்திரமாக விளையாடவும் உறுதியளிப்பதில் நானும் பயிற்சியாளர் டிராவிட்டும் பெரும் பங்கு வகிப்போம்.
வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியது, டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் தற்போது புதிதாக எங்கள் பயணத்தை தொடங்குகிறோம்.
விராட் கோலி முக்கியமான வீரர், அவர் விளையாடும் போதெல்லாம் பெரிய தாக்கத்தை உண்டு செய்வார் என கூறியுள்ளார்.