ரோகித் அவுட்டே கிடையாது! நடுவரின் முடிவால் புலம்பி தள்ளும் இந்திய ரசிகர்கள்: வெளியான காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடி காட்டி வந்த நிலையில் நடுவரின் முடிவால் ரோகித் சர்மா தமது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் ஜோ ரூட் சதம் அடித்தார்.
3 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற டேவிட் மலான் 70 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 354 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். பெரும் ஏமாற்றமாக கே.எல்.ராகுல் 8 ஓட்டங்களுக்கு வெளியேறி அதிர்ச்சிகொடுத்தார்.
பின்னர் வந்த புஜாரா - ரோகித் சர்மா ஜோடி கூட்டணி சேர்ந்து ஓட்டங்களை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிக்ஸரெல்லாம் அடித்து அசத்திய ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 59 ஓட்டங்களிலேயே வெளியேறினார்.
HUGE blow for ??
— SonyLIV (@SonyLIV) August 27, 2021
Umpire's call by the barest of margins forces him to head back for 59 ?
Tune into #SonyLIV now ? https://t.co/E4Ntw2hJX5 ??#ENGvsINDonSonyLIV #ENGvIND #RohitSharma #Wicket pic.twitter.com/csiRy1MYfB
ராபின்சன் வீசிய பந்தை கணிக்கத் தவறிய ரோகித் சர்மா, அதை தடுத்தாட முயல, பந்து மிக நுணுக்கமாக உரசி சென்றதால் நடுவர் ரோகித் வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் உண்மையில் இது நடுவரின் தவறான முடிவு என இந்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ரோகித் சர்மா வெளியேறிய நிலையில் தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
புஜாரா 91 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 45 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஓவர்டோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.