ரோகித் சர்மாவுக்கே இப்படி ஒரு நிலைமையா - வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே இந்த போட்டியின் போது இந்திய வீரர்கள் மைதானத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரோகித் சர்மா உட்பட வீரர்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென காற்றில் ரோகித் அணிந்திருந்த தொப்பி பறந்து சென்றது. அதனை பின்னால் வந்த வீரர் ஒருவர் எடுத்துக் கொடுக்க சிரித்துக் கொண்டே மீண்டும் மாட்டிக் கொண்டார்.
ஆனால் அடுத்த சில நடைகளில் மீண்டும் தொப்பி பறந்து போனது. இந்த வீடியோவை பதிவு செய்த ரசிகர்கள் ஒரு கேப்டன்னு கூட பார்க்காமல் இப்படி நடக்கலாமா என கிண்டலாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
Rohit sharma & his antique thing on the field or off the field is something which always makes our day.#INDvsSL pic.twitter.com/Hu9h6R3iEo
— Johns. (@CricCrazyJ0hns) March 13, 2022