இலங்கையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோலி, ரோகித் சர்மா! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்
விராட் கோலி, ரோகித் சர்மா தோள்கள் மீது கை போட்டு இலங்கை ரசிகர் எடுத்து கொண்ட புகைப்படம்.
சமூகவலைதளத்தில் வெளியிட்டு நெகிழ்ந்த ரசிகர்
இலங்கையை சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.
இந்த வெற்றிக்கு பின்னர் இலங்கையை சேர்ந்தவரான கயன் செனநாயகே என்ற ரசிகருக்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
Met Rohit & Virat today?❤️@ImRo45 | @imVkohli pic.twitter.com/GVVvmxihut
— Gayan Senanayake (@GayanSenanayke) August 29, 2022
அதன்படி கயன் தற்போது இலங்கை அணிக்கு ஆதரவு கொடுக்க ஆசிய கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தோள்களின் மீது கை போட்டு புகைப்படம் ஒன்றை அவர் எடுத்துள்ளார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கயன் வெளியிட்டுள்ளார்.
கயன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.