ரோகித் சிக்ஸர் மழை! வீறுநடை போட்ட பாகிஸ்தானை தவிடுபொடியாக்கிய இந்திய அணி
உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
காப்பாற்றிய பாபர் - ரிஸ்வான்
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் அகமதாபாத்தில் நடந்தது.
Mohammad Rizwan misses out on his half-century. #INDvPAK #CWC23 #SportsKeeda pic.twitter.com/fHWG2AZNAl
— Sportskeeda (@Sportskeeda) October 14, 2023
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாபர் அஸாம் 50 ஓட்டங்களும், ரிஸ்வான் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சை தெறிக்கவிட்டார்.
8⃣6⃣ Runs
— BCCI (@BCCI) October 14, 2023
6⃣3⃣ Balls
6⃣ Fours
6⃣ Sixes
That was a ? knock from #TeamIndia captain Rohit Sharma! ? ?
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/W3SHVn1wzD
ரோகித் மிரட்டல்
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 63 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 16 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக வெற்றிப்பாதைக்கு அணியை அழைத்து சென்றார். அவர் 31வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் விளாச, இந்திய அணியும் 192 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மறுமுனையில் கே.எல்.ராகுல் 19 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், ஹசன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நெதர்லாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
Make it 3⃣ in a row for #TeamIndia! ? ?
— BCCI (@BCCI) October 14, 2023
Shreyas Iyer sails past FIFTY as India beat Pakistan by 7 wickets! ? ?
Scorecard ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/ucoMQf2bmU
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |