சென்னை 28 படத்தை போல... முன்னாள் வீரர் பகிர்ந்த புகைப்படம்
நேற்று நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியினர் 48.5 ஓவர்களுக்கு 266 ரன்கள் எடுத்தனர்.
மழை காரணமாக ஆட்டம் தொடராமல் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
ஆட்டமிழந்த ரோஹிசர்மா
ரோஹித் சர்மா, ஷாஹீன் ஷா அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார்.ஏற்கனவே பலமுறை இடது கை பந்து வீச்சாளர்களிடம் ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததால், இந்த முறை ஆட்டமிழந்த விதம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை 28 படத்தில் நடிகர் சிவா கடற்கரை மணலில் ஆட்டமிழந்த விதத்தினை போலவே ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளதால் மீம்ஸ்கள் இணையத்தளத்தில் வைரலாகிவருகின்றன.
ஏற்கனவே நடிகர் சிவா போலவே ரோஹித்தும் இருப்பதாக மீம்ஸ்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நடிகர் சிவாவும் ஒரு முறை ''அவர் என்னைப்போல நடிக்க முடியாது,நான் அவரை போல பேட்டிங்ஆட முடியாது'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் சிஎஸ்கே வீரருமான பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவா மற்றும் ரோஹித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அதே மாதிரி உள்ளது எனவும் பகிர்ந்துள்ளார்.
Too identical (the shot I meant ?) #JustforFun #INDvPAK pic.twitter.com/XB0LhWHlxM
— S.Badrinath (@s_badrinath) September 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |