இந்திய அணியின் 250வது வீரராக களமிறங்கும் முடித்திருத்துபவரின் மகன்! தலைவணங்கிய கேப்டன்
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் 250வது வீரராக குல்தீப் சென் களமிறங்கினார்.
250வது வீரர்
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இதன்மூலம் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடும் 250வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவருக்கு தொப்பி அணிவித்த கேப்டன் ரோகித் சர்மா, கை குலுக்கியத்துடன் தலை வணங்கி வரவேற்றார்.
@BCCI
முடித்திருத்தம் செய்பவரின் மகன்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சென், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ரேவா கிராமத்தில் முடித்திருத்தம் செய்து தொழில் செய்து வருகிறார்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் குல்தீப் சென், மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.
@BCCI