முன்னாள் கேப்டன்களை பின்னுக்கு தள்ளி கேப்டன் ரோகித் சர்மா செய்த சாதனை - குவியும் பாராட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிளிலும் சிற்ப்பாக செய்ல்படதால் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனைப் படைத்துள்ளது. அந்த வகையில் கபில்தேவ், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி என பல ஜாம்பவான்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் கேப்டனாக இருந்த போதும் தொடரை முழுவதுமாக வென்றதில்லை. அதனை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.