டக் அவுட் ஆகி சோகமாக வெளியேறிய ரோகித் சர்மா! பாய்ந்து கேட்ச் பிடித்த டி காக் வீடியோ
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
வீடியோவை காண (ரோகித் சர்மா அவுட் 8.20)
தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்- கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரை வீசிய ரபாடா ரோகித் சர்மா (டக் அவுட்) விக்கெட்டை கைப்பற்றினார்.
2 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் டி காக் அபாரமாக கேட்ச் பிடித்ததையடுத்து களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினார்.