235 அடி உயரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்! சிக்கித் தவித்த பிரித்தானிய ரைடர்கள்..திக் திக் அனுபவத்தை வீடியோவாக பதிவிட்ட நபர்
பிரித்தானியாவில் காற்றின் வேகம் காரணமாக உயரத்தில் ரோலர் கோஸ்டர் நின்றுவிட்டதால், அதில் இருந்த நபர்கள் பீதியடைந்தனர்.
மிக உயரமான ரோலர் கோஸ்டர்
பிரித்தானியாவின் பிளாக்பூல் பிளஷர் பீச்சில் அமைந்துள்ளது Big One ரோலர் கோஸ்டர். மிக உயரமான ரோலர் கோஸ்டரான இது செயல்பாட்டின்போது, காற்றின் வேகம் அதிகரித்ததால் திடீரென நின்றது.
235 அடி உயரத்தில் கோஸ்டர் நின்றதால் அதில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்தனர். இதனால் ரைடர்கள் கோஸ்டரில் இருந்து வெளியேறி அவசர படிகளில் இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்போது ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த லியோ என்பவர் கோஸ்டரில் இருந்தபோது வீடியோ எடுத்தார்.
வீடியோ பதிவிட்ட நபர்
அதில் அவர் 'இது பயங்கரமானது, ரோலர் கோஸ்டரில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறோம்' என கூறினார். பின்னர் அதிக காற்றின் காரணமாக Big One ரோலர் கோஸ்டர் நாள் முழுவதும் மூடப்பட்டது.
உயரத்தில் சிக்கிக் கொண்ட சவாரியில் இருந்த ரைடர்கள், பிளாக்பூல் பிளஷர் பீச் ஊழியர்களால் உறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
Big One ரோலர் கோஸ்டர் அதிகபட்சமாக 85 கிலோ மீற்றர் வேகத்தில் செயல்படக்கூடியது. இது 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.