தேசிய அணிக்காக ருத்ர தாண்டவமாடும் ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை
யூரோ தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என போஸ்னியாவை வீழ்த்தியது.
பொசுங்கிய போஸ்னியா
UEFA யூரோ தகுதிச்சுற்று தொடரின் இன்றைய போட்டியில் போர்த்துக்கல் மற்றும் போஸ்னியா ஹெர்ஸிகோவினா அணிகள் மோதின.
Bilino Poljo மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணி அசுரவேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ கோல் அடித்தார்.
AFP
அதனைத் தொடர்ந்து 20வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறிய ரொனால்டோவை தடுக்க கோல் கீப்பரே முன்னே வந்தார். ஆனாலும் அசராமல் ரொனால்டோ பந்து தூக்கிவிட்டு கோல் ஆக மாற்றினார்.
அதன் பின்னர் புயல் வேகத்தில் ஏனைய போர்த்துக்கல் வீரர்களும் செயல்பட்டனர். 25வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸும், 32வது நிமிடத்தில் கேன்செலாவும் கோல் அடித்தனர்.
JOSE SENA GOULAOEFE
மிரட்டல் வெற்றி
இந்த அதிர்ச்சியில் இருந்து போஸ்னியா அணி மீள்வதற்குள் 41வது நிமிடத்தில் ஜோஹோ ஃபெலிக்ஸ் அதிரடியாக கோல் அடித்தார்.
கொட்டும் மழையில் இரட்டை கோல் அடித்து தெறிக்கவிட்ட ரொனால்டோ! தகுதிச்சுற்றில் போர்த்துக்கல் மிரட்டல் வெற்றி
இதனால் முதல் பாதியிலேயே போர்த்துக்கல் 5-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போர்த்துக்கல் இமாலய வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் ஸ்லோவாகியா அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்திருந்த ரொனால்டோ தற்போது மீண்டும் 2 கோல்கள் அடித்து மிரள வைத்துள்ளார்.
JOSE SENA GOULAOEFE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |