16 கோல்கள் அடித்தும் ரொனால்டோவுக்கு 3வது இடம் தான்..அப்போ சிறந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் யார்?
சவுதி புரோ லீக் சிறந்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது இடத்தைப் பிடித்தார்.
16 கோல்கள்
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அரபு அணியான அல் நாஸரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சீசனில் ரொனால்டோ அல் நஸருக்காக 17 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்தார். இதன்மூலம் அவர் 8.07 சராசரி மதிப்பீட்டை பெற்றார்.
Getty
இந்த நிலையில் Sofascore தொகுத்த பட்டியலின்படி சவுதி புரோ லீக் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோல்கீப்பரிடம் பந்தை கடத்திய வீரர்..குறுக்கே புகுந்து கோல் அடித்த ரொனால்டோ..ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்
மௌரட் பட்னா முதலிடம்
அதன்படி அல் ஃபடே அணியின் மிட்ஃபீல்டர் மௌரட் பட்னா (Mourad Batna) 8.11 சராசரி மேட்ச் ரேட்டிங்குடன் 7 கோல்கள், 7 கோல் உதவிகளுடன் முதலிடம் பிடித்தார்.
9 கோல் உதவிகளுடன் 8.09 சராசரி மேட்ச் ரேட்டிங் பெற்ற அல் இட்டிஹாட் அணியின் இகோர் கொரொனாடோ (Igor Coronado) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இவர்கள் இருவரை விடவும் அதிக கோல்கள் (16) அடித்திருந்தாலும், 7 கோல் உதவிகளுடன் 8.07 சராசரி மேட்ச் ரேட்டிங்கை வைத்திருப்பதால் ரொனால்டோ மூன்றாவது இடத்தையே பெற்றார்.
Wikipedia
அவருக்கு அடுத்த இடத்தில் அல் இட்டிஹாட் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்சிமா (8.03) உள்ளார். அவர் 9 கோல்கள் அடித்துள்ளார்.
Getty
38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் மற்றும் தேசிய அணிக்காக கோல் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார். அவர் இந்த ஆண்டு மட்டும் அல் நஸர் மற்றும் போர்த்துக்கலுக்கு 49 ஆட்டங்களில் 45 கோல்கள் அடித்துள்ளார். அதில் 12 கோல் உதவிகளும் அடங்கும்.
இந்த காலண்டர் ஆண்டில் ரொனால்டோவிற்கு விளையாட இன்னும் நிறைய ஆட்டங்கள் இருப்பதால், அவர் எளிதாக 50 கோல்களை கடக்க முடியும்.
REUTERS/Ahmed Yosri
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |