50 கோல்கள் அடித்து சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரொனால்டோ!
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2023ஆம் ஆண்டில் தனது 50வது கோலை அடித்துள்ளார்.
செகோ ஃபோபானா முதல் கோல்
கிங் சாம்பியன் கோப்பை தொடரின் காலிறுதியில் அல் நஸர் மற்றும் அல் ஷபாப் அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் அல் நஸரின் செகோ ஃபோபானா (Seko Fofana) 17வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
X (Twitter)
அதற்கு பதிலடியாக அல் ஷபாப்பின் கார்லோஸ் (Carlos) 24வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, 28வது நிமிடத்தில் சாடியோ மானே (Sadio Mane) மற்றும் அப்துல்ரஹ்மான் கரீஃப் (45+4வது நிமிடம்) கோல்கள் அடிக்க, முதல் பாதியில் அல் நஸர் 3-1 என முன்னிலை வகித்தது.
AFP
அதன் பின்னரான இரண்டாம் பாதியின் 74வது நிமிடத்தில் ரொனால்டோ புயல்வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார். இது இந்த ஆண்டில் மட்டும் அவர் அடித்த 50வது கோல் ஆகும்.
அல் நஸர் வெற்றி
ஆட்டத்தின் அல் ஷபாப் அணிக்கு ஹட்டன் பஹெபிரி மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது. ஆனால், 90+6வது நிமிடத்தில் முகமது மரன் (Mohammed Maran) அபாரமாக கோல் அடித்து அல் நஸரின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் அல் நஸர் 5 - 2 கோல் வித்தியாசத்தில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Into semi-final ☝️ pic.twitter.com/241bwFlsXo
— AlNassr FC (@AlNassrFC_EN) December 11, 2023
முன்னதாக, ஐரோப்பாவில் நான் கொடுத்ததை விட இரண்டு மடங்கினை (வெற்றி) அல் நஸருக்கு வழங்குவேன் என ரொனால்டோ கூறியிருந்த நிலையில், தற்போது அவரது அணி காலிறுதியில் வெற்றி பெற்றுள்ளது.
Al Nassr Official
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |