உயரத் தாவி தலையால் முட்டி கோல் அடித்த ரொனால்டோ! அதிர்ந்த மைதானம் (வைரல் வீடியோ)
அல்-அஹ்லி அணிக்கு எதிரான போட்டியில் அல்-நாஸர் அபார வெற்றி பெற்றது.
முதல் பாதியில் கோல் இல்லை
சவுதி ப்ரோ லீக் தொடர் போட்டியில், அல்-நாஸர் மற்றும் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அல்-அஹ்லி அணியும் மோதின.
🚨 Cristiano Ronaldo hitting his 970th career goal.
— Fabrizio Romano (@FabrizioRomano) April 29, 2026
🎥 @Rtiban1 pic.twitter.com/KE1ybafYM1
இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் எந்த கோலும் விழவில்லை.
இரண்டாம் பாதியில் அல்-நஸர் அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ துரிதமாக செயல்பட்டார்.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் ஜோவோ ஃபெலிக்ஸ் கார்னரில் இருந்து கிக் செய்ய, கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உயரத் தாவி தலையால் முட்டி கோல் அடித்தார்.
அல்-நஸர் வெற்றி
அதனைத் தொடர்ந்து, 90வது நிமிடத்தில் வேகமாக கிக் செய்த பந்து வலைக்குள் சென்று கோலாக மாறியது.
அதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் அல்-அஹ்லியினால் கோல் அடிக்க முடியாததால், அல்-நஸர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், ரொனால்டோ பதிவு செய்த தனது 970வது கோலினை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கோல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |