173 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்திற்கு சம்மதித்த ரொனால்டோ! வெளியான தகவல்
போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ சவுதி அரேபியாவின் 173 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல் நாசர் அணி
போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அல் நாசர் எஃப்சி அணி தங்கள் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு ரொனால்டோவை அணுகியது. மேலும் செல்சி, இண்டர் மியாமி மற்றும் ஏசி மிலன் போன்ற கிளப் அணிகளும் ரொனால்டோவுக்காக போட்டியிட்டன.
@REUTERS/Jennifer Lorenzini
மிகப்பெரிய ஒப்பந்தம்
இந்த நிலையில் அல் நாசர் அணியின் ஒப்பந்தத்திற்கு ரொனால்டோ சம்மத்தித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி ரொனால்டோ ஆண்டிற்கு 172.9 மில்லியன் பவுண்ட்கள் பெறுவார். இது இரண்டரை ஆண்டுகால ஒப்பந்தம் ஆகும்.
கத்தார் உலகக்கோப்பையில் கவனம் செலுத்தி வரும் ரொனால்டோ, கானாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
@Janerik Henriksson TT via AP