பிள்ளைகள் பெற்றுக்கொண்டு திருமணம்: ஜாம்பவான் ரொனால்டோ, ஜார்ஜினாவின் சுவாரஸ்ய காதல் கதை
கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜார்ஜினா ரோட்ரிகஸின் திருமணம் தொடர்பான செய்திதான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
ரொனால்டோ-ஜார்ஜினா
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அர்ஜென்டினா-ஸ்பானிஷ் மொடலான ஜார்ஜினா ரோட்ரிகஸ் (Georgina Rodriguez) உடன் 9 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ஜார்ஜினா கையில் மோதிரம் அணிந்தபடி பகிர்ந்து புகைப்படம் இவர்களின் திருமணத்தை உறுதி செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன.
ரசிகர்கள் பல ஆண்டுகளாக இவர்களின் திருமணம் எப்போது என்று எதிர்பார்த்த நிலையில் இந்தப் புகைப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோ, ஜார்ஜினாவின் காதல் கதையில் புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
எங்கே தொடங்கியது?
ரொனால்டோ 2016ஆம் ஆண்டில் மாட்ரிட்டில் உள்ள Gucci என்ற பிரபல வணிக கடையில் ஜார்ஜினாவை சந்தித்தார்.
அப்போது ஜார்ஜினா அங்கு பணிபுரிந்தார். பின்னர் இருவரும் Dolce & Gabbana நிகழ்வில் மீண்டும் சந்தித்துள்ளனர். இதுவே அவர்களின் உறவின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த FIFA விருதுகளில் ரொனால்டோவும், ஜார்ஜினாவும் பொதுவெளியில் ஒன்றாக தோன்றினர். இவர்களின் காதலை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் விரைவாகவே உறுதிப்படுத்தியது.
ஜார்ஜினாவின் பயணம் என்பது அர்ஜென்டினாவில் பிறந்து, ஸ்பெயினில் வளர்ந்ததில் இருந்து ஆடம்பர பாணியில் வேலை செய்வது மற்றும் அவரது Netflix தொடரான "I am Georgina" வரை நீண்டுள்ளது.
தங்கள் உறவினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர். அதற்கு சாட்சியாக அலானா மார்டினா, பெல்லா எஸ்மெரல்டா ஆகிய பிள்ளைகளுக்கு ஜார்ஜினா தாயானார்.
மேலும், ரொனால்டோவின் மகனான கிறிஸ்டியானோ ஜூனியரை தனது மகனாகவும் ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் இரட்டையர்களான ஈவா, மேடியோ ஆகியோரையும் (வாடகைத்தாய் மூலம் பிறந்தவர்கள்) மொத்தம் ஐந்து பிள்ளைகளை இருவரும் வளர்த்து வருகின்றனர்.
மாதந்தோறும் 114,000 டொலர்கள்
இதற்கிடையில், தனது காதலி ஜார்ஜினாவுக்காக மாதந்தோறும் 114,000 அமெரிக்க டொலர்களை ரொனால்டோ செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, ஒருவேளை இருவரும் பிரிந்தால் ஜார்ஜினாவின் வாழ்நாள் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜார்ஜினாவின் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 114,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுவார் என்றும், ரொனால்டோவின் பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள La Finca மேன்ஷனையும் சொந்தமாக்குவார் என்றும் போர்த்துக்கல் தொலைக்காட்சி GUIAயின்படி தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |