ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் ரொனால்டோ, நெய்மர்! ஜாம்பவானுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்ட கிளப்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
40வது பிறந்தநாள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்குகிறார். அல் நஸர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ மொத்தமாக 923 கோல்கள் அடித்துள்ளார்.
எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோ இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அவர் விளையாடிய முன்னாள் கிளப் ரியல் மாட்ரிட் வாழ்த்தினை பதிவிட்டுள்ளது. அதில், ''40வது பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு நாங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். அனைத்து ரியல் மாட்ரிட் ரசிகர்களும் ஜாம்பவானான உங்களை நினைத்தும், எங்களை வரலாற்றில் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கும் பெருமைகொள்கிறர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனியநாளாக அமையட்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🥳 Querido @Cristiano, desde el Real Madrid, queremos mandarte una cariñosa felicitación en tu 40 cumpleaños. Todos los madridistas estamos orgullosos de tu leyenda y de lo que representas para nuestra historia. Feliz día con tu familia y tu gente querida. pic.twitter.com/CxOiNhcCNd
— Real Madrid C.F. (@realmadrid) February 4, 2025
நெய்மர்
அதேபோல் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக பிரபலமான வீரரான பிரேசில் அணியின் நெய்மரும் (Neymar) இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரது கிளப்பான சாண்டோஸ் எப்சி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "உங்கள் எழுச்சியையும், பரிணாமத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம். உங்கள் சாதனைகளையும் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றியதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். கிராமத்து சிறுவனாக இருந்து இளவரசராக மாறியவருக்கு அல்வினெக்ராவின் வாழ்த்துக்கள். சாண்டோஸ் தேசம் எப்போதும் உங்களுடன் இருக்கும்!" என கூறியுள்ளது.
FELIZ ANIVERSÁRIO, NEYMAR JR! 🤍🖤
— Santos FC (@SantosFC) February 5, 2025
Nós vimos o seu surgimento e a sua evolução. Nós vimos as suas conquistas e a realização de todos os seus sonhos. E nós também vimos as suas dores e tristezas. De perto ou de longe, sempre estivemos com você. Nas vitórias e nas derrotas. E… pic.twitter.com/s5cX80jmjI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |