வீட்டிற்கு திரும்பிவிட்டேன்! அடுத்த பயணத்திற்கு தயாரான ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ யூரோ கோப்பைக்கு தயாராக நாடு திரும்பியுள்ளார்.
சவுதியில் மிரட்டும் ரொனால்டோ
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அரேபிய கிளப் அணியான அல் நஸரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
@AlNassrFC_EN (twitter)
சவுதி புரோ லீக்கில் அல் ஹஸ்ம் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அந்த போட்டியில் அல் நஸர் 5-1 என மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பையில் விளையாட தயாராவதற்கு போர்த்துக்கலிற்கு ரொனால்டோ விரைந்துள்ளார்.
யூரோ கோப்பைக்கு ஆயத்தம்
போர்த்துக்கல் அணி விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் 9ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில், ரொனால்டோ தனது தேசிய அணியில் இணைய உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'வீட்டிற்கு திரும்பியது சிறப்பு! யூரோ 2024 நோக்கிய எங்கள் பயணத்தில், அடுத்த 2 போட்டிகளை எதிர்கொள்ள அதிகபட்ச உந்துதல் மற்றும் முழு கவனம் வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை (9ஆம் திகதி) நடைபெற உள்ள போட்டியில் போர்த்துக்கல் அணி ஸ்லோவாகியாவை எதிர்கொள்கிறது.
Bom estar de volta a casa!????
— Cristiano Ronaldo (@Cristiano) September 4, 2023
Motivação maxima e foco total para encarar estes 2 próximos jogos nesta nossa caminhada rumo ao Euro2024!????#vesteabandeira pic.twitter.com/GWhYvyLweE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |