மெஸ்ஸி ரசிகர்களால் ரொனால்டோவுக்கு தடை! வெற்றியை தவறவிட்ட அல் நஸர்
அல் ஹஸ்ம் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ இல்லாமல் அல் நஸர் அணி ஆடியது.
ரொனால்டோவுக்கு தடை
சவுதி புரோ லீக் தொடரின் அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில், மெஸ்ஸி ரசிகர்கள் ரொனால்டோவை நோக்கி ''மெஸ்ஸி..மெஸ்ஸி'' என கோஷம் எழுப்பினர்.
Let’s hear it!!!! pic.twitter.com/lGxbMVYzVr
— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2024
இதனால் எரிச்சலடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அவர்களை நோக்கி தவறான சைகை காட்டினார். இதன் காரணமாக ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஒரு போட்டியில் விளையாட தடையும், ரூ.4,50,000 அபராதமும் சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விதித்து.
சமனில் முடிந்த போட்டி
இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அல் ஹஸ்ம் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ விளையாடவில்லை.
எனினும் அல் நஸரின் நட்சத்திர வீரர் தலிஸ்கா ஹாட்ரிக் கோல் அடித்தார். ஆனாலும் அல் ஹஸ்ம் அணி கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் 4-4 என சமனில் முடிந்தது.
That special feeling that runs through your body ?? pic.twitter.com/3FYwbqoVPW
— AlNassr FC (@AlNassrFC_EN) February 29, 2024
ஒரு போட்டி தடை முடிவடைந்ததால் மார்ச் 7ஆம் திகதி நடக்கவுள்ள Al-Raed அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |