ஒற்றை ஆளாக 111 கோல்! உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ரொனால்டோ: போர்ச்சுகலுக்காக விளையாட தடை!
2022 பிபா உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் ஐயர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல் வெற்றிப்பெற்றது.
2022 பிபல உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகின்றன.
நேற்று போர்ச்சுகலில் உள்ள Estádio Algarve மைதானத்தில் நடந்த தகுதிச்சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல்-அயர்லாந்து அணிகள் மோதின.
போட்டியின் 45வது நிமிடத்தில் அயர்லாந்து வீரர் john Egan முதல் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 89வது நிமிடத்தில் போர்ச்சுகல் ஜாம்பவான் ரொனால்டோ ஹெடிங் மூலம் கோல் அடித்து 1-1 என போட்டியை சமன் செய்தார்.
THE RECORD-BREAKING GOAL FOR RONALDO ? pic.twitter.com/RXZO2aVQy0
— ESPN FC (@ESPNFC) September 1, 2021
90 நிமிடங்கள் முடிந்த நிலையில் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. சரியாக இறுதி நொடிகளில் ரொனால்டோ மீண்டும் ஹெடிங் மூலம் கோல் அடித்து பட்டையை கிளப்பினார்.
இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அயர்லாந்தை வீழ்த்தியது வெற்றி வாகை சூடியது.
RONALDO FOR THE WIN!!!
— ESPN FC (@ESPNFC) September 1, 2021
SCENES ??? pic.twitter.com/FqIvPyzoIP
சர்வதேச கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ அடித்த 110 மற்றும் 111வது கோலாகும்.
இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து ஈரானின் அலி டேயி சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
இதுவரை அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் 109 கோல்களுடன் அலி முதலிடத்தில் இருந்தார். தற்போது, 111 கோல்களுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
இதனிடையே, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2வது கோல் அடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ தனது டி-சட்டையை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
டி-சட்டையை கழற்றியதற்காக போட்டியின் நடுவர் Matej Jug ரொனால்டோவுக்கு மஞ்சள் கார்டு வழங்கினார்.
இதனால், ரொனால்டோ ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் நடைபெறவிருக்கும் Azerbaijan அணிக்கு எதிரான போர்ச்சுகல் போட்டியில் ரொனால்டோ விளையாட முடியாது.