ரொனால்டோ முகத்தில் கொட்டிய ரத்தம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
எதிரணி வீரருடனான மோதலில் ரொனால்டோவுக்கு ஏற்பட்ட காயம்
காயமடைந்தாலும் மீண்டும் வந்து விளையாடிய ரொனால்டோவால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்
போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டியின் போது பலத்த காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
போர்த்துக்கல் - செக் குடியரசு அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி சினோபோ மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் ரொனால்டோ ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
The hit from Vaclik to Cristiano Ronaldo pic.twitter.com/nsXtxs2qvX
— Mohammed (@ZAJD01) September 24, 2022
ஆட்டத்தின் முதல் 12 நிமிடங்களுக்குள் ரொனால்டோவுக்கு பயங்கர காயம் ஏற்பட்டது. எதிரணியின் விக்கெட் கீப்பர் மோதியதில் ரொனால்டோவின் முகத்தில் ரத்தம் கொட்டியது.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் ரொனால்டோ பேண்டேஜ் போட்டு வந்து விளையாடினார். இறுதியில் போர்த்துக்கல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.