கோல் அடிக்காத ரொனால்டோவை பார்த்து 'மெஸ்சி..மெஸ்சி' என கோஷமிட்ட ரசிகர்கள்! வைரலாகும் அவரது பதில்
அல் ஹிலால் ரசிகர்கள் மெஸ்ஸி பெயரை கோஷமிட்டபோது ரொனால்டோ பறக்கும் முத்தத்தை பதிலாக அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அல் நஸர் அணிக்கு அதிர்ச்சி
கிங் பாஹ்ட் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடந்த சவுதி புரோ லீக் தொடரில் அல் ஹிலால் மற்றும் அல் நஸர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் சமபலத்துடன் இரு அணிகளும் மோதியதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் அல் நஸர் அணிக்கு எதிரணி வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் செர்கேஜ் மிலின்கோவிக் சவிக் (Serej Milinkovic Savic) மிரட்டலாக தலையால் முட்டி கோல் அடித்தார்.
Ronaldo blew kisses at the Al-Hilal fans as they chanted Messi's name ?
— B/R Football (@brfootball) December 1, 2023
(via @footballontnt)pic.twitter.com/VVTrQg4q0h
அல் ஹிலால் வெற்றி
அதனைத் தொடர்ந்து 89 மற்றும் 90+2வது நிமிடங்களில் அல் ஹிலாலின் (Al-Hilal) அலெக்ஸண்டர் மிட்ரோவிக் (Aleksandar Mitrovic) அதிரடியாக கோல்கள் அடித்தார்.
Al Hilal official
இறுதிவரை அல் நஸர் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் அல் ஹிலால் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
முதல் பாதி முடிவில் வீரர்கள் டக்அவுட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரொனால்டோவைப் பார்த்து அல் ஹிலால் ரசிகர்கள் ''மெஸ்ஸி..மெஸ்ஸி..'' என்று கோஷமிட்டனர்.
அதனை கவனித்த ரொனால்டோ சிரித்துக் கொண்டே முத்தங்களை பறக்கவிட்டார். அவரது இந்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |