ஒரே போட்டியில் 3 சாதனையை முறியடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
கத்தாருக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு சர்வதேச மற்றும் ஒரு ஐரோப்பிய சாதனையை முறியடித்துள்ளார்.
நேற்று அக்டோபர் 9ம் திகதி போர்ச்சுகலில் உள்ள Estádio Algarve மைதானத்தில் நடந்த நட்பு போட்டியில் போர்ச்சுகல்-கத்தார் அணிகள் மோதின.
ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை பந்தாடியது போர்ச்சுகல். கிறிஸ்டியானோ ரொனால்டோ (37 ), ஜோஸ் ஃபோன்டே (48), ஆண்ட்ரே சில்வா (90 ) என போர்ச்சுகல் வீரர்கள் 3 கோல் அடித்தனார்.
அக்டோபர் 9ம் திகதி கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் தேசிய அணிக்காக தனது 181 வது போட்டியில் களமிறங்கினார்.
இதன் மூலம் ஸ்பெயினின் Sergio Ramos-வின் (180 சர்வதேச போட்டிகள்) சாதனையை முறியடித்து, ஐரோப்பாவில் அதிக சர்வதேச போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையை ரொனால்டோ (181 சர்வதேச போட்டிகள்) படைத்துள்ளார்.
Cristiano Ronaldo scores for Portugal against Qatar assisted by Diogo Dalot! ??
— The United Zone Podcast (@UnitedZonePod) October 9, 2021
pic.twitter.com/tniFawWHNp
கத்தாருக்கு எதிராக ஒரு கோல் அடித்ததின் மூலம் 112 கோல்களுடன், சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
அதேசமயம் கத்தாருக்கு எதிராக 1 கோல் அடித்ததின் மூலம், 46 தேசிய அணிகளுக்கு எதிராக கோல் அடித்த வீரர் என்ற சாதனையும் ரொனால்டோ படைத்துள்ளார்.