ஓய்வுபெறும் முடிவுக்கு வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! முக்கிய இடத்தில் வாங்கிய ஆடம்பர பங்களா
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜுமேரா தீவில் ஆடம்பர குடியிருப்பு ஒன்றை வாங்கிய போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஓய்வுக்கு தயாராவதாக தகவல் கசிந்துள்ளது.
கோடீஸ்வரர்கள் மட்டும் தங்கும் பகுதியில்
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள பெரும் கோடீஸ்வரர்களுக்கான தீவில் போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடம்பர குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
@getty
சவுதி அரேபியாவின் Al-Nassr கால்பந்து அணியின் தலைவராக உள்ள ரொனால்டோ 2023ல் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்துள்ளார். முக்கியமான பல நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள ரொனால்டோ, தற்போது துபாய் மாகாணத்திலும் குடியிருப்பு ஒன்றை சொந்தமாக்கியுள்ளார்.
பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும் தங்கும் பகுதியில் ரொனால்டோ குடியிருப்பு வாங்கியுள்ள நிலையில், அதன் வசதிகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்டுகள்
ஆனால் ஜுமேரா தீவில் பொதுவாக ஒரு குடியிருப்புக்கு 6 படுக்கையறை, நீச்சல் குளம், ஸ்பா மற்றும் கடற்கரையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் வசதிகள் என அனைத்தும் அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
@georginagio/Instagram
ரொனால்டோ தற்போது ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்து வருகிறார். மேலும், பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமான ஒரு பகுதியில் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதால், ரொனால்டோ ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |