பாரம்பரிய உடையில் உற்சாகமாக சவுதியில் கொண்டாடிய ரொனால்டோ! அல் நஸர் வெளியிட்ட வீடியோ
போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா நிறுவன தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்.
Foundation Day
38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
பிப்ரவரி 22ஆம் திகதியை சவுதி அரசு ஸ்தாபிக்கப்பட்டதை Foundation Day என நினைவுகூர்கிறது. இதற்கான கொண்டாட்டம் அல் நஸரின் சொந்த மைதானமான மிர்சூல் பூங்காவில் நடைபெற்றது.
நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடை அணிந்து Foundation Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
Happy Saudi #FoundingDay Everyone ???
— AlNassr FC (@AlNassrFC_EN) February 22, 2023
That's how we celebrate this special day at @AlNassrFC ?
pic.twitter.com/3XmXPJtcar
அல் நஸர் அணி வெளியிட்ட பதிவுகள்
இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை அல் நஸர் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதே போல் ரொனால்டோவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Saudi #Foundingday was special for us ??? pic.twitter.com/Df2JqoZqSb
— AlNassr FC (@AlNassrFC_EN) February 22, 2023
??? pic.twitter.com/D7naEngiaW
— AlNassr FC (@AlNassrFC_EN) February 22, 2023
அத்துடன், 'சவுதி அரேபியாவிற்கு நிறுவன தின வாழ்த்துக்கள். அல் நஸரில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றது ஒரு சிறப்பு அனுபவமாக இருந்தது' என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது அணி வீரர்களுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடினார்.
Happy founding day to Saudi Arabia ??
— Cristiano Ronaldo (@Cristiano) February 22, 2023
Was a special experience to participate in the celebration at @AlNassrFC ! pic.twitter.com/1SHbmHyuez