உயர தாவி தலையால் முட்டி கோல் அடித்த ரொனால்டோ! அல் நஸர் அபார வெற்றி
அல்-கரஃபா அணிக்கு எதிரான போட்டியில் அல்-நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தவறிய கோல்
AFC சாம்பியன்ஸ் லீக் தொடரின் நேற்றையப் போட்டியில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல்-கரஃபா (Al-Gharafa) அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் 19வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கிக் செய்த பந்தை, எதிரணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.
பின்னர் ரொனால்டோ 33வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சிக்க, கோல் கம்பத்திற்கு வெளியே சென்று தவறியது.
அல்-கரஃபா வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தாலும், ரொனால்டோ கோல் தொடர்ந்து on goal ஷாட் அடித்தார்.
44வது நிமிடத்தில் கோல் போஸ்ட் நோக்கி அவர் கிக் செய்த பந்தை, எதிரணி வீரர் உதைத்து வெளியேற்றினார்.
ஹெட்டர் ஷாட் கோல்
ஒருவழியாக அல்-நஸர் அணிக்கு 46வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. சுல்தான் உயர கிக் செய்த பந்தை ரொனால்டோ ஹெட்டர் ஷாட் அடித்து கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் அல்-நஸர் வீரர் ஏஞ்சலோ கேப்ரியல் (Angelo Gabriel) பந்தை லாவகமாக கடத்தி வந்து வலைக்குள் தள்ளினார்.
அதனைத் தொடர்ந்து ரொனால்டோ 64வது நிமிடத்தில், ஏஞ்சலோ பாஸ் செய்த பந்தை அபாரமாக கிக் செய்து கோலாக்கினார்.
கோல் அடிக்க போராடிய அல்-கரஃபா அணிக்கு ஜோசெலு (Joselu) மூலம் 75வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. இறுதியில் அல்-நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |