கொட்டும் மழையில் இரட்டை கோல் அடித்து தெறிக்கவிட்ட ரொனால்டோ! தகுதிச்சுற்றில் போர்த்துக்கல் மிரட்டல் வெற்றி
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியா அணியை வீழ்த்தியது.
ராமோஸ் முதல் கோல்
Estadio do Dragao மைதானத்தில் நடந்த UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் போர்த்துக்கலின் ராமோஸ் தலையால் முட்டி மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் ஸ்லோவாகியா வீரரின் கையில் பந்து பட்டதால் Handball என்று அறிவிக்கப்பட்டது.
ரொனால்டோ இரட்டை கோல்
இதனால் போர்த்துக்கலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ அதனை கோல் ஆக மாற்றினார்.
அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியில் ஸ்லோவாகியோ வீரர் 69வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 3 நிமிடங்களில், அதாவது 72வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
Getty Images
இரண்டாம் பாதியில் மழை பொழிந்தபோதும் போர்த்துக்கல் வீரர்கள் அதனை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தீவிரம் காட்டினர்.
80வது நிமிடத்தில் ஸ்லோவாகியா அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிடைத்தது. ஆனால் போர்த்துக்கலின் தடுப்பினால் மேற்கொண்டு ஸ்லோவாகியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
EFE/EPA/JOSE COELHO
இறுதியில் போர்த்துக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது போர்த்துக்கலுக்கு 7வது வெற்றி ஆகும்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |