செங்கடலில் 5 பிள்ளைகளுடன் கொண்டாட்டத்தில் ரொனால்டோ! வைரலாகும் புகைப்படம்
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ரொனால்டோ
அல் நஸர் சவுதி கிளப் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அல் அஹ்லி சவுதி அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து தமது அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் அல் நஸர் அணி 56 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 31ஆம் திகதி நடைபெற உள்ள அல் டாய் அணிக்கு எதிரான போட்டியில் அடுத்ததாக அல் நஸர் விளையாட உள்ளது.
குடும்பத்துடன் கொண்டாட்டம்
இதற்கிடையே 10 நாட்கள் இடைவெளி உள்ளதால், ரொனால்டோ தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட தொடங்கியுள்ளார்.
தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் அவர், அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் பொழுதினை கழிக்கும் புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் ''குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் ரீசார்ஜ் செய்துகொள்கிறேன்'' என ரொனால்டோ பதிவிட்டுள்ளார். தற்போது அவரது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Recharging in Saudi Arabia with the family! ❤️@VisitSaudi @VisitRedSea pic.twitter.com/zmsqSWX6zj
— Cristiano Ronaldo (@Cristiano) March 20, 2024