பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ! சரியாகவே விளையாடலயே... ரசிகர்கள் வருத்தம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அல் நாசர் அறிமுக போட்டியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அல் நாசர் அணிக்காக
ஞாயிற்றுக்கிழமையான நேற்று சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிரான போட்டியில் தனது புதிய கிளப்பான அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
ஆண்டுக்கு £175 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புடன் ரொனால்டோ இணைந்த நிலையிலேயே நேற்று களம் கண்டார்.
Reuters
பங்களிப்பை அணிக்காக...
இப்போட்டியில் அல் நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்-எட்டிஃபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ முழு 90 நிமிடங்களும் விளையாடிய நிலையில் சொல்லக்கூடிய பங்களிப்பை அணிக்காக வழங்கவில்லை.
இவ்வளவு பெரிய பணம் கொடுத்து ஒப்பந்த செய்யப்பட்ட ரொனால்டோ அறிமுக போட்டியில் சோபிக்காமல் போனது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.