ரொனால்டோ குடும்பத்துக்காக சவுதி அரேபியாவில் நடந்த ஒரு ஆச்சரிய மாற்றம்! புகைப்படங்கள்
ரொனால்டோ குடும்பத்திற்காக சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்கு பூங்கா இரண்டு மணி நேரத்திற்கு மூடப்பட்டது.
பொழுதுபோக்கு பூங்கா
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நசாருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
37 வயதான அவர் ஏற்கனவே சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்குச் சென்று தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ரியாத்தில் உள்ள Boulevard World பொழுதுபோக்கு பூங்காவிற்கு ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினியா மற்றும் 4 குழந்தைகளுடன் நேற்று முன் தினம் சென்றார்.
(Instagram/ Georgina Rodriguez)
மூடப்பட்டது
இதையடுத்து வேறு யாரும் பொதுமக்கள் அந்த பொழுதுபோக்கு பூங்காவிற்குள் வராதபடி பூங்காவானது 2 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.
அங்கு எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை ஜார்ஜினியா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.