கடைசிவரை கோல் அடிக்காத ரொனால்டோ! அல் நஸர் அதிர்ச்சி தோல்வி..ரசிகர்கள் ஏமாற்றம்
சவுதி ப்ரோ லீக்கில் அல் நஸர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல் கியாடிசியா அணியிடம் தோல்வியுற்றது.
அல் நஸர்-அல் கியாடிசியா
பிரின்ஸ் மொஹம்மது பின் ஃபாத் மைதானத்தில் நடந்த போட்டியில், அல் நஸர் மற்றும் அல் கியாடிசியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அல் கியாடிசியா வீரர் துர்க்கி அல்-அம்மர் (Turki Al-Ammar) கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் அல் நஸர் வீரர்கள் திணறினர்.
எனினும் இரண்டாவது பாதியில் அல் நஸருக்கு கோல் கிடைத்தது. நட்சத்திர வீரர் சாடியோ மானே (Sadio Mane) 84வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
கோல் அடிக்காத ரொனால்டோ
ஆனால் அடுத்த 3 நிமிடங்களிலேயே அல் கியாடிசியா மற்றொரு கோல் அடித்தது. அந்த அணியின் பியெர்ரே (87வது நிமிடம்) அபாரமாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் அல் நஸரின் முயற்சிகள் தோல்வியில் முடிய, 2-1 என்ற கோல் கணக்கில் அல் கியாடிசியா வெற்றி பெற்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கடைசிவரை கோல் அடிக்காததும், தங்கள் அணி தோல்வியுற்றதாலும் அல் நஸர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |