மின்னல் வேகத்தில் தலையால் முட்டி ரொனால்டோ கோல்! ஸ்தம்பித்து நின்ற கோல் கீப்பர்
அல் வெஹ்தா அணிக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் தொடர் போட்டியில், அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிங் அப்துல் அஸிஸ் மைதானத்தில் நடந்த சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் வெஹ்தா மற்றும் அல் நஸர் அணிகள் மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இப்போட்டியில் ரொனால்டோ மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் அவர் கிக் செய்த ஷாட்டை, அல் வெஹ்தா கோல் கீப்பர் விரைந்து செயல்பட்டு தடுத்தார்.
எனினும் 48வது நிமிடத்தில் ஏஞ்சலோ கேப்ரியல் பாஸ் செய்த பந்தை, மின்னல் வேகத்தில் வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, பதில் கோல் அடிக்க அல் வெஹ்தா (Al Wehda) வீரர்கள் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
கூடுதல் நேரத்தில் (90+10) அல் நஸரின் சாடியோ மானே (Sadio Mane) பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். இதன்மூலம் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |