ரொனால்டோவிற்கு 30 நாட்கள் தடை, 255 யூரோ அபராதம்
ronaldo fined 255 suspended 30 days portugal walk out: பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறிய ரொனால்டோவிற்கு 30 நாட்கள் தடை மற்றும் 255 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவிற்கு 30 நாட்கள் தடை
டென்மார்க்கிற்கு எதிரான போர்ச்சுகலின் நேஷன்ஸ் லீக் போட்டிக்கு முன்னதாக, கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

ரொனால்டோ மாற்று வீரராக அமர்ந்திருந்த நிலையில், தான் சுமார் 30 நிமிடங்கள் விளையாடுவேன் என்று பயிற்சியாளர் ஜீசஸ் முன்பே தனக்கு உறுதியளித்ததாகவும், ஆனால் அதனை மீறி விட்டதாகவும் ரொனால்டோ கூறினார்.
அதன் பின்னர் ரொனால்டோ பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியது தவறு என ஒப்புக்கொண்டு, தனது சக வீரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் மன்னிப்புக் கோரினார்.
இதன் காரணமாக ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு, அவர் அணியில் இணைய 30 நாட்கள் தடையும், 255 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.27,195) அபராதமும் விதித்துள்ளது.
ரொனால்டோ பயிற்சி முகாமை விட்டு வெளியேறிய நாளான செப்டம்பர் 30 ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை முன்தேதியிடப்பட்டுள்ளதால், போர்ச்சுகல் அணியுடன் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ள நவம்பர் 14 ஆம் திகதி அன்று ரொனால்டோ மீண்டும் விளையாடத் தகுதி பெறுவார்.